கோர்ட் வளாகத்தில் பெண் தீக்குளித்து தற்கொலை..!

திருப்பூர் மாவட்டம், தாராபுரம், நாஞ்சியம்பாளையம் அடுத்த தெக்கலுாரை சேர்ந்தவர் கோவிந்தம்மாள், 54, கணவரை இழந்தவர், பெற்றோருடன் வசித்து வந்தார். பெற்றோர் வைத்திருந்த, 4 ஏக்கர் நிலத்தில், 1 ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்து கொள்ள கோவிந்தம்மாளிடம் கூறினர்.

கடந்த, 10 ஆண்டுகளாக, இவரது தந்தை ராமசாமிக்கும், கோவிந்தம்மாளின் இரு சகோதரர்களான பாலசுப்ரமணியன், ஈஸ்வரன் ஆகியோருக்கு இடையே நிலம் தொடர்பான பிரச்சினை இருந்தது.

இது தொடர்பான வழக்கு தாராபுரம் சப்-கோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த, 3 ஆம் திகதி இவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சில நாட்களாக வக்கீல்களை சந்தித்து கோவிந்தம்மாள் பேசி வந்தார். மனமுடைந்து இருந்த அவர் நேற்று மதியம் கோர்ட் வளாகத்தில் விஷம் குடித்து விட்டு, மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளித்தார். அக்கம்பக்கத்தில் இருந்தோர் காப்பாற்ற முயன்றும் முடியவில்லை.

உடல் கருகி அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். தாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles