தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கு : நீதிபதியின் புது உத்தரவு..!

தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் விவாகரத்து வழக்கு விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார் குடும்பநல நீதிமன்ற நீதிபதி சுபா தேவி. மேலும் வழக்கு விசாரணை அன்று தனுஷும், ஐஸ்வர்யாவும் நேரில் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.

தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இருந்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். மகன்கள் யாத்ரா, லிங்காவை அழைத்துக் கொண்டு தன் அப்பாவின் போயஸ் கார்டன் பங்களாவுக்கு சென்றுவிட்டார் ஐஸ்வர்யா. இந்நிலையில் விவாகரத்து கோரி சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்திருக்கிறார்கள் தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும்.

அந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 7ம் தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறார் நீதிபதி சுபா தேவி. மேலும் அக்டோபர் 7ம் தேதி தனுஷும், ஐஸ்வர்யாவும் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

தனுஷும், ஐஸ்வர்யாவும் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து பிரிவை அறிவித்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையிலும் அவர்கள் விவாகரத்து கேட்டகாமல் இருந்தது ரசிகர்களுக்கு ஆறுதலாக இருந்தது. என்றாவது ஒரு நாள் தனுஷும், ஐஸ்வர்யாவும் சேர்ந்துவிடுவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தார்கள்.

இந்நிலையில் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து கேட்டிருப்பது ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியிருக்கிறது. மறுமணம் செய்யும் எண்ணமில்லை என்று தானே விவாகரத்து வாங்குவதில் ஆர்வம் இல்லாமல் இருந்தார்கள். அப்படி இருக்கும்போது தற்போது விவாகரத்து கேட்டிருக்கிறார்கள் என்றால் மறுமணத்திற்கு தயாராகிவிட்டார்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான லால் சலாம் படத்திற்காக ட்வீட் செய்தார் தனுஷ். அதை பார்த்த ரசிகர்களோ, ஐஸ்வர்யாவும், தனுஷும் மீண்டும் சேரப் போகிறார்கள் என சந்தோஷப்பட்டார்கள். ஆனால் அவர் ஐஸ்வர்யாவுக்காக அல்ல மாறாக தன் தலைவன் ரஜினிக்காக ட்வீட் செய்தது தெரிய வந்தது.

இந்நிலையில் விவாகரத்திற்கு விண்ணப்பித்த பிறகு தனுஷை தன் வீட்டிற்கு அழைத்து பேசியிருக்கிறார் ரஜினி. ஐஸ்வர்யாவும், தனுஷும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என விரும்புகிறார் அவர். ஆனால் மீண்டும் சேர்ந்து வாழும் பேச்சுக்கே இடமில்லை, எனக்கு விவாகரத்து தான் வேண்டும் அப்பா என திட்டவட்டமாக கூறிவிட்டாராம் ஐஸ்வர்யா.

ரஜினியை சந்தித்துவிட்டு தனுஷ் தன் காரில் கிளம்பியபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியானது. ரஜினியை சந்தித்தார் என்றதும் விவாகரத்து மனுவை திரும்பப் பெறப் போகிறார் தனுஷ் என ரசிகர்கள் நம்பினார்கள். ஆனால் ஐஸ்வர்யாவுக்கு விவாகரத்து தான் வேண்டும் என்பதை அறிந்ததும் ரசிகர்கள் வேதனை அடைந்தார்கள்.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles