Thursday, February 5, 2026
Homeஷங்கர் மகள் திருமணத்தில் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்ட ரஜினி..!

ஷங்கர் மகள் திருமணத்தில் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொண்ட ரஜினி..!

இயக்குநர் ஷங்கர் மகள் திருமணத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழக்கத்திற்கு மாறாக செய்த காரியம் அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது. ரஜினி செய்த காரியம் குறித்து அறிந்த ரசிகர்களோ, தலைவர் தலைவர் தான் என்கிறார்கள்.

இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் ஏப்ரல் 15ம் தேதி திருமணம் நடந்தது. அந்த திருமண நிகழ்ச்சியில் ரஜினகாந்தும், கமல் ஹாசனும் சேர்ந்து கலந்து கொண்டது சினிமா ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.

நடிகர்கள் விக்ரம், சூர்யா, கார்த்தி உள்ளிட்டோரும் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணத்தை அடுத்து நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், அனிருத், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், ஸ்ருதி ஹாசன், போனி கபூர், ஜான்வி, சிரஞ்சீவி, மோகன்லால் என ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டார்கள்.

இந்நிலையில் திருமண நிகழ்ச்சியில் ரஜினி செய்தது பற்றி தகவல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டால் மணமக்களை வாழ்த்திய கையோடு கிளம்பிச் சென்றுவிடுவாராம்.

திருமண வீட்டில் சாப்பிடும் பழக்கம் அவருக்கு இல்லை. ஆனால் ஐஸ்வர்யா ஷங்கர் திருமண நிகழ்ச்சியில் மணமக்களை ஆசிர்வாதம் செய்துவிட்டு சாப்பிடவும் செய்திருக்கிறார். சாப்பிட்ட பிறகே அங்கிருந்து கிளம்பிச் சென்றாராம் ரஜினி.

எந்த திருமணத்திலும் சாப்பிடாத ரஜினி, ஐஸ்வர்யாவின் திருமணத்தில் சாப்பிட்டதற்கு காரணம் ஷங்கர் என தெரிய வந்திருக்கிறது. திருமண நிகழ்ச்சிக்கு சென்றால் அங்கு சாப்பிடுவது அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை என நினைப்பவர் ஷங்கர். இந்நிலையில் தான் ரஜினியிடம் அன்புக் கோரிக்கை விடுத்து அவரை சாப்பிட வைத்து அனுப்பியிருக்கிறார்.

சாப்பிடாமல் சென்றால் மரியாதை இல்லை என்று ரஜினி சாப்பிட்டுச் சென்றது ரசிகர்களை பாராட்ட வைத்திருக்கிறது. இதற்கிடையே ஐஸ்வர்யா, தருண் கார்த்திகேயனின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டு டான்ஸ் ஆடினார்.

கில்லி படத்தில் விஜய், த்ரிஷா சூப்பராக டான்ஸ் ஆடிய அப்படி போடு பாடலுக்கு ரன்வீர் சிங்குடன் இயக்குநர் அட்லி, அதிதி ஷங்கர், அவரின் தம்பி ஆர்ஜித் ஆகியோரும் சேர்ந்து டான்ஸ் ஆடினார்கள். ரன்வீர் சிங்கை விட ஷங்கரின் மகன் ஆர்ஜித் தான் செமயாக டான்ஸ் ஆடியிருக்கிறார். அப்பொழுது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி விட்டது.

RELATED ARTICLES

Most Popular