ஐ.பி.எல். 2024 பஞ்சாப் – மும்பை அணிகளிடையான மோதல் இன்று..!

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று (18) முல்லாப்பூரில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 33ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

பஞ்சாப் அணி இதுவரை 6 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி (டில்லி, குஜராத் அணிக்கு எதிராக), 4 தோல்வி (பெங்களூரு, லக்னோ, ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகளிடம்) தோல்வி கண்டுள்ளது.

5 முறை சம்பியான மும்பை இந்தியன்ஸ் இந்த சீசனில் தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஹைதராபாத், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக) தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்த மும்பை அணி அடுத்த 2 ஆட்டங்களில் (டில்லி, பெங்களூரு அணிகளுக்கு எதிராக) வெற்றி பெற்றது.

ஆனால் சொந்த மண்ணில் நடந்த முந்தைய ஆட்டத்தில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னையிடம் பணிந்தது.

முந்தைய ஆட்டத்தில் தோல்வியை சந்தித்து இருக்கும் இவ்விரு அணிகளும் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய நெருக்கடியில் இருக்கின்றன.

இரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 16 ஆட்டத்தில் மும்பையும், 15 ஆட்டத்தில் பஞ்சாப்பும் வெற்றி பெற்றுள்ளன.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles