பார்சிலோனா ஓபன் டென்னிஸ் : ரபெல் நடால் தோல்வி..!

பார்சிலோனா ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஸ்பெயினில் நடந்து வருகிறது.

களிமண் தரை போட்டியான இதில் நேற்று நடந்த ஒற்றையர் பிரிவின் 2ஆவது சுற்று, ஆட்டம் ஒன்றில் முன்னாள் முதற்தர வீரரும், 12 முறை சம்பியனுமான ரபெல் நடால் (ஸ்பெயின்) அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

அவரை 7-5, 6-1 என்ற நேர் செட்டில் 11-ம் நிலை வீரர் அலெக்ஸ் டி மினார் (அவுஸ்ஸ்திரேலியா) வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் 6-ம் நிலை வீரரான கேஸ்பர் ருட் (நோர்வே) 6-3, 6-4 என்ற நேர் செட்டில் அலெக்சாண்ட்ரே முல்லரை (பிரான்ஸ்) தோற்கடித்து 3ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles