இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் ‘கனா’ திரைப்பட நடிகை..!

சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கிய திரைப்படம் கனா. ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த இந்த படம் மகளிர் கிரிக்கெட் தொடர்பான கதையம்சம் கொண்டிருந்தது.

மாபெரும் வெற்றி பெற்ற இந்த படத்தில் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலரும் நடித்து இருந்தனர். அந்த வகையில், கனா படத்தில் நடித்த கிரிக்கெட் வீராங்கனை சஜனா சஜீவன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார்.

வங்காளதேசம் அணிக்கு எதிரான ரி-20 கிரிக்கெட் தொடரில் சஞ்சனா சஜீவன் இந்திய அணிக்காக களமிறங்கவுள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ரி-20 தொடர் ஏப்ரல் 28 ஆம் திகதி தொடங்கஉள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles