Friday, February 6, 2026
Homeஓடும் காரின் கதவில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த வாலிபர் : வீடியோ வைரல்..!

ஓடும் காரின் கதவில் தொங்கியபடி ஆபத்தான பயணம் செய்த வாலிபர் : வீடியோ வைரல்..!

சமூக வலைதளங்களில் பிரபலம் ஆவதற்காகவே வாலிபர்கள் சிலர் சாகசங்கள் செய்து அதனை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இதில் சில சாகசங்கள் விபரீதமாக உள்ளன. அதுபோன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் சுமித் துபே என்பவர் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், ஓடும் காரின் கதவில் வாலிபர் ஒருவர் படுத்த நிலையில் தொங்கிக் கொண்டு ஆபத்தான பயணம் செய்த காட்சிகள் பயனர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

காரை ஒருவர் ஓட்டுகிறார். காரின் பின்சீட்டில் 2 வாலிபர்கள் அமர்ந்துள்ளனர். டிரைவர் காரை மெதுவாக ஓட்டும் நிலையில் கார் கதவில் பிளாஸ்டிக் கவரால் உடலை சுற்றியவாறு ஒரு வாலிபர் படுத்த நிலையில் தொங்கியபடி செல்கிறார்.

இந்த வீடியோ வைரலாகி 90 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை குவித்த நிலையில் பயனர்கள் பலரும் அந்த வாலிபரின் சாகச செயலை கண்டித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular