ஐ.பி .எல் 2024 : மும்பை-ராஜஸ்தான் அணிகளிடையான மோதல் இன்று..!

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரில், ஜெய்ப்பூரில் இன்று(22) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் 38ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 1 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் பட்டியலில் 1 ஆவது இடத்திலுள்ளது. முந்தைய கல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் 223 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை அடைந்து 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.

ஹர்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி இதுவரை 7 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 4 தோல்வி என 6 புள்ளிகளுடன் பட்டியலில் 7ஆவது இடத்திலுள்ளது.

இதற்கு முந்தைய பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் 192 ஓட்டங்களை பெற்ற மும்பை அணி, 9 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles