மே 7 ஆம் திகதி புது சாதனங்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள்..!

ஆப்பிள் நிறுவனம் மே 7 ஆம் திகதி புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்காக ஆப்பிள் நிறுவனம் லெட் லூஸ் (Let Loose) என்ற பெயரில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து வருகிறது. ஆப்பிள் லெட் லூஸ் நிகழ்ச்சிக்கான அறிவிப்பில் ஆப்பிள் பென்சில் ரெண்டர் இடம்பெற்று இருக்கிறது.

இத்துடன் ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பதிவில், புதிய சாதனங்கள் அறிமுகத்தை ஒட்டி புதிய ஐபேட் ப்ரோ மற்றும் ஆப்பிள் பென்சில் கிராஃபிக் டிசைன் திறன்களை எடுத்துரைக்கும் சிறு வீடியோவை இணைத்துள்ளார்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை அறிமுகம் செய்யும் என்று தெரிகிறது. இவற்றில் M3 சிப், OLED டிஸ்ப்ளே, மெல்லிய பாடி மற்றும் பெசல்கள், மேட் ஸ்கிரீன் ஆப்ஷன் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என்று தெரிகிறது.

மேலும் இரண்டு புதிய ஐபேட் ஏர் மாடல்கள், ஐபேட் ப்ரோ மாடலுக்கென ரிடிசைன் செய்யப்பட்ட மேஜிக் கீபோர்டு அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. புதிய ஆப்பிள் பென்சில் விசேஷ வசதிகளை கொண்டிருக்கும் என்றும் இதில் விஷன் ஒ.எஸ். சப்போர்ட் வழங்கப்படும் என்றும் தெரிகிறது.

ஆப்பிளின் லெட் லூஸ் நிகழ்ச்சி மே 7 ஆம் திகதி காலை 7 மணிக்கு (இலங்கை நேரப்படி இரவு 7.30) துவங்க இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles