விஷால் உடம்பில் 109 தையல் : இதுக்கு எல்லாம் காரணம் அந்த ‘டார்லிங்’ தானாம்..!

தன் உடம்பில் 109 தையல் இருப்பதற்கு காரணம் யார் என்பதை தெரிவித்திருக்கிறார் விஷால். அவர் சொன்னதை கேட்ட ரசிகர்களோ, மேலும் தையல் போடாமல் பார்த்துக்கோங்க என்கிறார்கள்.

விஷாலின் உடம்பில் 109 தையல் இருக்கிறது. அதில் பெரும்பாலான தையலுக்கு காரணம் திரையுலக பிரபலம் ஒருவர் தான்.

ஹரி இயக்கத்தில் விஷால், ப்ரியா பவானிசங்கர் நடித்திருக்கும் ரத்னம் படம் நாளை தியேட்டர்களில் ரிலீஸாகவிருக்கிறது. இது விஷால், ஹரி கூட்டணியில் வெளியாகும் 3வது படமாகும். ரத்னம் படத்தை பெரிய அளவில் விளம்பரம் செய்திருக்கிறார் விஷால். அப்படி விளம்பர நிகழ்ச்சியில் தன் உடம்பில் 109 தையல் இருப்பது குறித்து பேசி ரசிகர்களை கவலை அடைய செய்துவிட்டார்.

ரத்னம் விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் விஷால் கூறியதாவது, என் உடம்பில் 109 தையல் இருக்கு. 100வது தையல் போட்டபொழுது என் நண்பர்களுக்கு பார்ட்டி வைத்தேன். என் உடம்பில் 109ல் அதிகமான தையலுக்கு காரணம் என் டார்லிங் கனல் கண்ணன் மாஸ்டர். என்ன வந்து ஆக்ஷன் ஹீரோ, விஷால் ஆக்ஷனில் கலக்குறாருனு ஒவ்வொருத்தரும் சொல்வதற்கு முக்கியமான காரணம் கனல் கண்ணன். சண்டக்கோழி படத்தில் என்னை நம்பினார் என்றார்.

எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. சண்டக்கோழி கிளைமாக்ஸ் காட்சியை ஷூட் பண்ணும்போது ஒரு கிக் அடிக்கும்போது முதல் ரியாக்ஷன் இவர் தான். மானிடர் எல்லாம் பார்க்க மாட்டார். அப்படியே உடைத்துவிட்டு போய்க்கிட்டே இருப்பார், சந்தோஷத்தில். கிடைச்சான்யா ஜாக்கி சானுனு போனார் என விஷால் மேலும் தெரிவித்தார். விஷால் உடம்பில் இத்தனை தையல் வர கனல் கண்ணன் தான் காரணம்னு தெரியாமல் போச்சே என்கிறார்கள் ரசிகர்கள். வேணும்னே ரிஸ்க் எடுத்து தையல் போடவில்லை என்கிறார் விஷால்.

விஷால் படங்களுக்கு ஆந்திரா, தெலுங்கானாவிலும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதையடுத்து ஹைதராபாத்துக்கு சென்று ரத்னம் படத்தை விளம்பரம் செய்தார். மார்க் ஆண்டனி படத்தை போன்று ரத்னம் படமும் பெரிய அளவில் ஹிட்டாகும் என நம்புவதாக கூறியிருக்கிறார் விஷால். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி படம் ரூ. 100 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2026ம் ஆண்டு அரசியலுக்கு வருகிறேன் என தெரிவித்துள்ளார் விஷால். அதே சமயம் தன்னை அரசியலுக்கு வரவிடாமல் தடுக்குமாறு ஆட்சியாளர்களுக்கு கோரிக்கை விடுத்திருக்கிறார். அதாவது ஆட்சியாளர்களே மக்களுக்கு நல்லது செய்துவிட்டால் தான் அரசியலுக்கு வர வேண்டிய அவசியம் இல்லை என்கிறார். மக்களுக்கு நல்லது நடந்துவிட்டால் நான் ஏன் என் தொழிலை விட்டுட்டு அரசியலுக்கு வரப் போகிறேன் என தெரிவித்துள்ளார்.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles