அதிருப்தியில் ரஜினி : இந்தியன் 2 விழாவிற்கு வருவாரா..!

கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்துகொள்வாரா ? இல்லையா ? என்பது சந்தேகமாக இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் தயாராகும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்துள்ள நிலையில் இன்னும் ஒரே ஒரு பாடல் தான் படமாக்கப்பட இருக்கின்றதாம். கமலை வைத்து மிகப்பிரமாண்டமாக உருவாகவிருக்கும் அப்பாடல் விரைவில் படமாக்க பட இருக்கின்றது.

அதன் பிறகு ஜூன் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தான் இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தேதி குறிப்பிடவில்லை. அநேகமாக ஜூன் 13 ஆம் தேதி இந்தியன் 2 திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கடந்த சில மாதங்களாகவே தமிழில் எந்த ஒரு பெரிய படங்களும் வெளியாகவில்லை. வெளியாகும் ஒரு சில சிறு பட்ஜெட் படங்களும் வெற்றிபெறவில்லை.

எனவே தமிழ் சினிமாவை கமலின் இந்தியன் 2 தான் காப்பாற்றவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் நேரு ஸ்டேடியத்தில் மிகப்பிரம்மாண்டமான முறையில் நடைபெற இருக்கின்றதாம். மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்விழாவிற்கு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சிறப்பு விருந்தினராக அழைக்க இருப்பதாக தெரிகின்றது. ஆனால் ரஜினி இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்பது சந்தேகம் தான் என பேசி வருகின்றனர். ஏனென்றால் ரஜினிக்கும் லைகா தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஏதோ கருத்து வேறுபாடு இருந்து வருவதாக தகவல்கள் வருகின்றன.

லால் சலாம் படத்தின் ரிலீஸிலும், வேட்டையன் படப்பிடிப்பின் போதும் ரஜினிக்கு லைகா மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இதன் காரணமாக லைகா தயாரிக்கும் கமலின் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி கலந்துகொள்வது சந்தேகம் தான் என பேசப்பட்டு வருகின்றது. ஆனால் இத்தகவலில் எந்தளவிற்கு உண்மை உள்ளது என தெரியவில்லை.

இந்நிலையில் கமலுக்காக ரஜினி இந்தியன் 2 விழாவில் பங்கேற்கவும் வாய்ப்புள்ளதாகவே தெரிகின்றது. எனவே ரஜினி இந்தியன் 2 விழாவில் பங்கேற்பாரா ? இல்லையா ? என்பதாகி நாம் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles