கொலையில் முடிந்த நண்பர்களுக்கு இடையிலான வாக்குவாதம்..!

நண்பர்கள் இருவருக்கு இடையில் இடம்பெற்ற வாக்குவாதம் கைகலப்பாக மாறியதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கட்டுகஸ்தோட்டை பல்லேமுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (29) மாலை இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், உயிரிழந்தவரின் சடலம் பேராதனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles