கொழும்பில் இருந்து யாழ் சென்றவர் மயங்கி வீழ்ந்து மரணம்..!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற நபர் ஒருவர் இன்றையதினம் காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள அவரது நண்பரின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

கொழும்பு கொட்டஞ்சேனை பகுதியைச் சேர்ந்த கிறிஸ்தோபர் சுரேந்திரன் வில்சன் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த நபரின் நண்பர் வெளிநாட்டில் வசித்து வருகின்றார். வெளிநாட்டில் வசித்து வருபவரது வீடு காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ளது. குறித்த வீட்டில் வேலை செய்வதற்காக உயிரிழந்த நபரும் அவரது நண்பரும் சென்றிருந்தனர்.

இதன்போது குறித்த நபர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles