பள்ளிவாசலில் 6 பேர் சுட்டுக்கொலை : தொழுகையின் போது பயங்கரம்..!

ஆப்கானிஸ்தானின் கசாரா மாவட்டத்திலுள்ள ஷியா பள்ளிவாசலொன்றில் நேற்று இரவு இடம்பெற்ற தொழுகைபோது அங்கு நுழைந்த அடையாளம் தெரியாத மர்ம நபர், சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் காயமடைந்ததாகவும் தலிபான் அதிகாரி தெரிவித்துள்ளார்.

தாக்குதல்தாரி உடனடியாக அங்கிருந்து தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கொல்லப்பட்டவர்களில் பள்ளிவாசலின் இமாமும் ஒருவரும் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகத் தெரிய வருகிறது.

இந்த தாக்குதலை முன்னாள் ஜனாதிபதி ஹமித் கர்சாய் வன்மையாக கண்டித்துள்ளார்.

ஐ.எஸ். அமைப்பின் துணை அமைப்பு, ஆப்கானிஸ்தானில் ஆளும் தலிபான்களுக்கு முக்கிய போட்டியாகவுள்ளது.

பாடசாலைகள், வைத்தியசாலைகள், பள்ளிவாசல்கள் மற்றும் ஷியா மக்கள் அதிகம் உள்ள பகுதிகளை குறிவைத்து அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles