பேலியகொடையில் கைதான 25 பெண்களுக்கும் பாலியல் நோய்..!

பேலியகொட பொலிஸ் பிரிவில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 25 பெண்கள் பாலியல் நோய்கனால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

இப் பெண்கள் பேலியகொட மத்திய சந்தை தொகுதி, மீன் சந்தை, பட்டிய சந்தி, வெதமுல்ல உள்ளிட்ட பகுதிகளில் வைத்தே பேலியகொட தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் பாவனைக்காக விபசாரத்தில் ஈடுபடும் இப் பெண்கள் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் “யுக்திய“ தேடுதல் நடவடிக்கைக்கு இணையாக பேலியகொடை தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் என்.ஏ.களுவிதாரண உள்ளிட்ட அதிகாரிகள் கடந்த வாரம் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

இதில் இருபத்தைந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், கொழும்பு இல.05 நீதவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் மருத்துவப் பரிசோதனைக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இப் பெண்களிடம் எடுக்கப்பட்ட இரத்த மாதிரிகளில் இருபத்தைந்து பெண்களுக்கும் கொனோரியா, ஹெர்பெஸ் போன்ற பாலியல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர்களை சிறைச்சாலை வைத்தியசாலையின் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு வழங்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பேலியகொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இந்த பெண்களுடன் தொடர்பை வைத்திருந்தவர்கள் வைத்திய பரிசோதனைகளை செய்து கொள்ளுமாறு பேலியகொட பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், விபசாரத்தில் ஈடுபடும் பெண்களுடன் பழகும்போது அவதானமாக செயற்படுமாறும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles