மோட்டார் சைக்கிள் கால்வாயில் வீழ்ந்ததில் மாணவர் பலி : இருவர் படுகாயம்..!

கல்கமுவ எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள புனரமைக்கப்பட்ட ரயில் பாதையில் பயணித்த மோட்டார் சைக்கிள் கால்வாயில் வீழ்ந்ததில் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பலேகடவலயிலிருந்து கல்கமுவ நகரை நோக்கி நிர்மாணிக்கப்பட்டு வரும் ரயில் பாதையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவருமே இவ்விபத்தில் சிக்கியுள்ளனர்.

பலேகடவல பிரதேசத்தைச் சேர்ந்த எம்.டி.சாமோத் வசல என்ற 17 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றைய இருவரும் அதே பகுதியில் வசிக்கும் மாணவர்களாவர். விபத்துக்குப் பிறகு, ஒருவர் அப்பகுதியிலுள்ள வீடுகளில் உதவி கேரியுள்ளார். அதன்பின்னர் அவ்விடத்தை அடைந்த மக்கள் ஓடையில் விழுந்தவர்களை 1919 அம்புயூலன்ஸ் சேவைக்கு அறிவித்து கல்கமுவ ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போதே ஒரு மாணவன் உயிரிழந்துள்ளார். மற்றைய இரு மாணவர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஒரு மாணவன் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles