லிட்ரோ காஸ் விலை குறைப்பு..!

இன்று (03) நள்ளிரவு முதல் சமையல் எரிவாயு விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக லிட்ரோ காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் இதனைக் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தற்போது 4,115 ரூபாவாக விற்பனை செய்யப்படும் 12.5 கிலோ கிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 3,940 ரூபாவாகும்.

மேலும் 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.70 குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,582 ரூபாவாகும்.

இதேவேளை 2.3 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 32 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 740 ரூபாவாகும்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles