எல்லோரும் அவரை விரும்புகின்றனர்: டோனி குறித்து ப்ரீத்தி ஜிந்தா ஓபன் டாக்..!

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற முதலாவது ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் சென்னை 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டி முடிந்த பிறகு ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா பதில் அளித்துள்ளார். அதில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் டோனியை புகழ்ந்து பேசியுள்ளார்.

அதில், உங்களின் சொந்த மைதாங்களில் ரசிகர்களை வரவைப்பதற்காக ஏதாவது செய்ய வேண்டும். ஏனெனில் நேற்றைய ஆட்டத்தில் தரம்சாலா மைதானம் முழுவதும் மஞ்சள் நிற ஜெர்சிகள்தான் நிறைந்திருந்தது என ரசிகர் ஒருவர் X தளத்தில் கேள்வி எழுப்பினார்.

அதற்கு ப்ரீத்தி ஜிந்தா கூறியதாவது:- ரசிகர்கள் அனைவரும் டோனியை காண வருகின்றனர். நான் என்ன சொல்ல முடியும். எல்லோரும் அவரை விரும்புகின்றனர்.

இவ்வாறு கூறினார். இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles