தக் லைஃப் படத்தில் இணைந்தார் சிம்பு..!

பிரபல நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் மணி ரத்னத்துடன் ”நாயகன்’ படத்துக்குப் பின் 34- ஆண்டுகளுக்கு பிறகு ‘தக் லைப்’ என்ற ஆக்ஷன் படத்தில் மீண்டும் இணைந்து உள்ளார்.

இப்படத்தில் கமல்ஹாசன் , த்ரிஷா, நாசர், அபிராமி, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து உள்ளார் .

இப்படத்தை ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கியது. முதல்கட்ட் படப்பிடிப்பு சென்னையிலும், இரண்டாம் கட்டம் செர்பியாவிலும் நடைப்பெற்றது. சமீபத்தில் சிம்பு தக் லைஃப் படத்தில் இணைந்தார்.

இந்நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தில்லியில் நடைப்பெற்று வருகிறது. இதில் சிம்புவுக்கான காட்சிகளை படமாக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியது. படத்தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த நிலையில் தக் லைஃப் படத்தில் இருந்து அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

எ நியூ தக் இன் டவுன் அரைவிங் ஆன் மே 8 என போஸ்டரை வெளியிட்டனர். அதில் கருப்பு நிற கார் புழுதியை கிளப்பிக் கொண்டு சீறிப் பாய்ந்து வருவதுப் போல் காட்சி அமைந்துள்ளது. நடிகர் சிம்புவின் இண்டிரோ வீடியோவாக இது இருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles