‘GOAT’ போஸ்ட் புரொடக்ஷன் : அப்டேட் கொடுத்த அர்ச்சனா கல்பாத்தி..!

நடிகர் விஜய் பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் ‘தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்’ (தி கோட்) படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.

இப்படத்தில் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, சினேகா,லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தில் விஜய் 2 வேடங்களில் நடிக்கிறார். இதில் விஜய் இளமையான தோற்ற வேடத்தில் நடிக்கிறார். இதற்காக நவீன தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

கோட் படம் சூட்டிங் எல்லாம் முடிந்து போஸ்ட் ப்ரோடக்சன் வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை வைத்துள்ளார் அதில் ‘கோட் போஸ்ட் ப்ரோடக்ஷன் பிகைன்ஸ்’ என்று வைத்து பகிர்ந்துள்ளார். இந்த பதிவை தொடர்ந்து செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து உள்ளது.

மலேசியாவில் விரைவில் இப்படத்திற்கான இசை வெளியீடு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles