மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனை : நாளை வரை கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை..!

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான யோசனைகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்க நாளை (17) வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மே மாதம் முதலாம் திகதி ஆணைக்குழுவிடம் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்படவிருந்த போதிலும், மின்சார சபை விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் எதிர்வரும் 10ஆம் திகதி வரை காலத்தை நீடிக்க பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது.

எவ்வாறாயினும், கடந்த 10ஆம் திகதி இலங்கை மின்சார சபை உரிய முன்மொழிவுகளை ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவில்லையென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

முன்மொழிவுகளை சமர்ப்பிக்க நாளை வரை கால அவகாசம் வழங்குமாறு இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உரிய முன்மொழிவுகள் கிடைக்கப்பெற்ற பின்னர் மின்கட்டணத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுமென்றும், ஜூலை மாதம் மின் கட்டணக் குறைப்பு குறித்து அறிவிக்கப்படுமென்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles