விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தை தோற்கடித்து 15 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட 15 ஆவது போர்வீரர் நினைவேந்தலுடன் இணைந்து 3,146 கடற்படை சிரேஷ்ட மற்றும் இளைய கடற்படையினருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேராவின் பரிந்துரையின் அடிப்படையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அங்கீகாரத்துடன் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட்டதாக கடற்படை மேலும் குறிப்பிடுகிறது.
