ஷங்கருடன் முதன்முறையாக இணையும் ஏகே : இந்திய சினிமா வியக்க போகும் பிரம்மாண்ட படைப்பு..!

அஜித் கைவசம் தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி படங்கள் உள்ளன. அடுத்தடுத்து இந்த படங்களில் பிசியாக நடித்து கொண்டிருக்கிறார் ஏகே. இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க அஜித் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுப்பற்றிய செய்தி இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

‘விடாமுயற்சி’ படப்பிடிப்பு இன்னமும் முழுமையாக நிறைவடையாத நிலையில் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஷுட்டிங் துவங்கிவிட்டது. இப்படத்தில் தற்போது மும்முரமாக நடித்து கொண்டிருக்கிறார் ஏகே. அடுத்தடுத்து இரண்டு படங்களில் அஜித் நடித்து வருவது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவும் அஜித் திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

தமிழ் சினிமாவில் பிரம்மாண்டத்துக்கு பெயர் போனவர் ஷங்கர். இவர் தற்போது உலக நாயகன் கமல் நடிப்பில் ‘இந்தியன் 2’ படத்தினை இயக்கியுள்ளார். லைகா, ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்காக நீண்ட காலமாகவே ரசிகர்கள் வெறித்தனமான காத்திருப்பில் இருக்கின்றனர்.

இந்நிலையில் ‘இந்தியன் 2’ படம் வரும் ஜுலை 13 ஆம் தேதி பிரம்மாண்டமாக ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இதனையடுத்து தற்போது ப்ரோமோஷன் பணிகள் துவங்கியுள்ளன. இதனிடையில் ராம்சரண் இயக்கத்தில் ‘கேம் சேஞ்சர்’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார் ஷங்கர். தில் ராஜு தயாரிக்கும் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது.

இதனிடையில் நீண்ட காலமாக ‘வேள்பாரி’ படத்தினை இயக்க வேண்டும் என்பது ஷங்கரின் கனவாக இருக்கிறது. இரண்டாவது முறையாக மதுரை எம்.பி. ஆகியுள்ள சு. வெங்கடேஷன் எழுதியுள்ள ‘வேள்பாரி’ நாவலை பிரம்மாண்டம படைப்பாக உருக்கும் பணிகளில் கடந்த சில காலமாகவே ஈடுபட்டு வருகிறார் ஷங்கர். பாகுபலி, கே.ஜி.எப் படங்களை எல்லாம் விட பிரம்மாண்டமாக வேள்பாரியை இயக்க திட்டமிட்டுள்ளார் ஷங்கர்.

இந்நிலையில் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம் ஏகே. அனேகமாக இவர்கள் இருவரும் இணையும் படம் ஷங்கரின் கனவு படைப்பான வேள்பாரியாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் உண்மையானால் இந்திய சினிமாவே வியக்கும் பிரம்மாண்ட படைப்பாக ‘வேள்பாரி’ உருவாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து கொண்டிருக்கிறார் அஜித். பேன் சம்பவமாக உருவாகி வரும் இப்படத்தின் ஷுட்டிங் துவங்கி மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகவுள்ள ‘விடாமுயற்சி’ படத்தின் மீதமுள்ள படப்பிடிப்பை முடிக்கவும் அஜித் திட்டமிட்டுள்ளார். விரைவில் விடாமுயற்சி ஷட்டிங் ஆரம்பம் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles