ஆப்கானிடம் படுதோல்வி அடைந்த நியூசிலாந்து..!

நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற டி20 உலகக் கிண்ணப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி மாபெரும் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 80 ஓட்டங்களை அதிகப்பட்சமாக பெற்றுக் கொண்டார்.

எவ்வாறாயினும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 75 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

பந்து வீச்சில் ஃபசல்ஹக் ஃபரூக்கி மற்றும் அணித்தலைவர் ரஷித் கான் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்படி, இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles