சிறுமியை தாக்கிய தந்தைக்கு சிறையில் தாக்குதல்..!

சிறுமி மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த சிறுமியின் தந்தை மீது சக கைதிகளால் சிறையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சிறுமி ஒருவர் மீது தாக்குதல் நடத்தும் காணொளி சமூக ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இரு பெண்களும், பிரதான சந்தேகபரும் கைது செய்யப்பட்டனர்.

மணலாறு பொலிஸார் புல்மோட்டை விசேட அதிரடிப் படையினர் மற்றும் முல்லைத்தீவு குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இணைந்து முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது சிறுமியைத் தாக்கிய குகுல் சமிந்த என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்படி 45 வயதான பிரதான சந்தேகநபரும், 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களும் கடந்த ஐந்தாம் திகதி இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பதவிய நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேகநபரை அதே சிறைச்சாலையில் உள்ள ஏனைய கைதிகள் சிலர் தாக்கியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles