நீட் முறைகேடு.. உள்ளே விளையாடிய ரூ.300 கோடி.. அதிரவைக்கும் பேப்பர் லீக் மாஃபியா..!

நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட மருத்துவப்படிப்புகளில் சேர்வதற்கான நீட் இளநிலைத் தேர்வில் பல்வேறு குளறுபடிகளும் முறைகேடுகளும் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த விவகாரம் பூதகரமாகத் தொடங்கியுள்ளது.

பீகார், ராஜஸ்தானில் வினாத்தாள் கசிவு நடந்து இருந்தது. ஒரு வினாத்தாள் ரூ.30 லட்சம் வரையில் விற்னையானது. நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தனர். அரியானாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் முதலிடம் பெற்றனர். இந்த சம்பவங்களால் நீட் தேர்வில் மிகப்பெரிய சர்ச்சை வெடித்தது.

நீட் முறைகேடுகளில் ஈடுபட்ட குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். அவர்களிடம் நடந்துவரும் விசாரணையில் அடுத்தடுத்து திடுக்கிடும் மோசடிகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் வினாத்தாள் கசிவுக்கு காரணமாக இருந்த முக்கிய குற்றவாளி பிஜேந்திர குப்தாவிடன் இன்று விசாரணை நடத்தப்பட்டது.

முன்னதாக பிஜேந்தர் குப்தா, நீட் மட்டுமின்றி பீகார் , மத்தியப் பிரதேசம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கும் அரசுத் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்திலும் சம்பந்தம் உடைய முக்கிய குற்றவாளி ஆவார். கடந்த 24 வருடங்களாக வினாத்தாள் கசிய விடுவதை தொழிலாளாக செய்து வரும் பிஜேந்தர், இந்த தொழிலில் பழக்க வழக்கம் மற்றும் நெட்வொர்க்கிங் தான் முக்கிய தேவை என்று குறிப்பிடுகிறார்.

இடதற்கிடையில் நீட் தேர்வு கடந்த மே மாதம் நடந்த நிலையில், மார்ச் மாதமே நீட் தேர்வுத் தாளுடன் பிஜேந்தர் உலாவும் வீடியோ ஒன்றும் போலீசாரிடம் சிக்கி உள்ளது. போலீசார் பிடிக்க வரும்போது இரண்டுமுறை டேக்கா கொடுத்த பிஜேந்தர் இறுதியாக தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இந்த வருடம் அரங்கேறிய நீட் வினாத்தாள் கசிவு குறித்து பிஜேந்தர் அளித்துள்ள வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது, இந்த முறை நடந்த நீட் இளநிலை தேர்வுகளில் வினாத்தாளை 700 பேருக்கு விற்க டார்கட் பிக்ஸ் செய்து வேலை பார்த்துள்ளனர். இதன் மூலம் ரூ.200 கோடியிலிருந்து 300 கோடிவரை வருமானம் ஈட்டலாம் என்று எதிர்பார்த்துள்ளனர்.

இந்த வருட நீட் முறைகேட்டில் பிஜேந்தரின் நெட்ஒர்க் மட்டுமே சம்பாதிக்க திட்டமிட்டிருந்தது இத்தனை கோடியென்றால், நாடு முழுவதும் இதுபோல் இயங்கி வந்த மற்ற நெட்ஒர்க்கள் மொத்தமாக எவ்வளவு சம்பாதித்திருக்கும் என்பதே தற்போது அனைவரின் கேள்வியாகவும் உள்ளது. பிரச்சனையின் தீவிரம் கருதி இந்த முறைகேடு வாழக்குகள் சிபிஐ வசம் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles