17 வயது சிறுவனால் சிறுமி துஷ்பிரயோகம்..!

யாழ்ப்பாணம், நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் சிறுவனொருவனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் 15 வயதான சிறுமியை 17 வயதான சிறுவன் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் அச்சிறுவன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அச்சிறுமியை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

நீதிமன்ற விசாரணைகளையடுத்து சிறுவனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles