விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி : வெங்கல் ராவுக்கு உதவிய வடிவேலு..!

தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் வெங்கல் ராவ். சண்டை பயிற்சி கலைஞராக சினிமாவில் 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிய வெங்கல் ராவ் நடிகர் வடிவேலுவுடன் இணைந்து கந்தசாமி உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார்.

நடிகர் வடிவேலுவுடன் இணைந்து 30-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் வெங்கல் ராவ். வடிவேலு நடிப்பிலிருந்து விலகியிருந்த காலத்தில் பட வாய்ப்புகள் கிடைக்காமல் சிரமப்பட்டார் வெங்கல் ராவ்.

ஏற்கனவே சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட வெங்கல் ராவ் சில தினங்களுக்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், ஒரு கை மற்றும் ஒரு கால் வேலை செய்யவில்லை என்றும் பேசக் கூட முடியாமல் கஷ்டப்படுகிறேன். சினிமா நடிகர்கள் உதவி செய்யுங்க என கூறியிருந்தார். சமூக வலைத்தளங்களில் வைரலான இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அதிர்க்குள்ளாகினர்.

இதையடுத்து, வெங்கல் ராவுக்கு முதல் ஆளாக நடிகர் சிம்பு ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார். வெங்கல் ராவ் வெளியிட்ட வீடியோவை பார்த்த சிம்பு, தனது உதவியாளரை நேரில் அனுப்பி ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் வழங்கி உள்ளார். உதவி பெற்றுக்கொண்ட வெங்கல் ராவ் நடிகர் சிம்புவுக்கு நன்றியை தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து வெங்கல் ராவுக்கு சின்னத்திரை நடிகர் கேபிஒய் பாலா ரூ.1 லட்சமும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ரூ.25 ஆயிரமும் என உதவி வழங்கினர்.

இந்நிலையில், நடிகர் வடிவேலு ஒரு லட்சம் ரூபாயை வெங்கல் ராவுக்கு வழங்கியுள்ளார். வெங்கல் ராவை போனில் தொடர்பு கொண்டு பேசிய வடிவேலு அவருக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக, வடிவேலு தன்னுடன் நடித்த நடிகர்கள் மோசமான நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு உதவி செய்யமாட்டார் என பலரும் அவரை விமர்சித்த நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெங்கல் ராவுக்கு அவர் உதவி செய்துள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles