இறந்தவரின் உடல் நடுவீட்டில் : கால்பந்து போட்டியை இரசித்த விசித்திர குடும்பம்..!

தென்னமெரிக்காவில் உள்ள ஒரு குடும்பம் கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்காக இறுதி சடங்கை நிறுத்தி வைத்த சம்பவம் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.

பொதுவாகவே ஒருவர் இறந்துவிட்டால் இறந்தவரின் உடலுக்கு பல சடங்குகளை செய்து நல்லடக்கம் செய்வது வழக்கம். ஆனால் இதற்கு மாறாக தென்னமெரிக்காவில் உள்ள குடும்பம் ஒன்று இறந்து போன உறவினரின் உடலை ஓரமாக வைத்துவிட்டு பெரிய திரையில் கால்பந்து போட்டியை பார்த்து கொண்டிருக்கும் சம்பவம் ஒன்று காணொளியாக வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியில் இறந்த உறவினரின் சவப்பெட்டியில் பூக்கள் மற்றும் கால்பந்து வீரர்களின் ஜெர்சிகளால் அலங்கரிக்கப்பட்டு இறந்த உறவினரின் சவப்பெட்டியின் அருகில் அமர்ந்து பெரிய திரையில் கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகளே அக்காணொளியில் வைரலாகி வருகின்றது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles