கோலை தவறவிட்ட ரொனால்டோ : மைதானத்திலே கண்ணீர் விட்டு அழுத சோகம்..!

யூரோ கிண்ணம் -2024 கால்பந்து தொடரின் போட்டியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ கோலை அடிக்க முயன்று தவறவிட்டதால் மைதானத்தில் வைத்து அழுத காட்சி அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது.

யூரோ கிண்ணம் 2024 கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் ஆரம்ப சுற்றுப்போட்டிகள் நிறைவுபெற்று தற்போது காலிறுதி வரை சென்றிருக்கிறது.

இந்தப் போட்டியில் 16ஆவது சுற்றுப்போட்டி நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் போர்த்துகல் மற்றும் ஸ்லோவேனியா அணிகள் மோதின.

போட்டியில் முதல் பாதியில் 0-0 என்ற கோல் கணக்கில் இரண்டு அணிகளும் இருந்ததால் பெனால்டி கோல் வாய்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது முதல் பெனால்டியை போர்த்துகல் அணித்தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அடிக்க முயன்றபோது அம்முயற்சி அவருக்கு தோல்வியைக் கொடுத்தது அதனால் அக்கணமே அவர் கண்களில் இருந்து கண்ணீர் வர ஆரம்பித்தது.

அதனைத் தொடர்ந்து பெனால்டி ஷூட் அவுட்டில் போர்த்துகல் கோல்கீப்பர் டியாகோ கோஸ்டா ஸ்லோவேனியா வீரர்களான ஜோசப் இலிசிச், ஜியூர் பால்கோவெச், மற்றும் பெஞ்சமின் வெர்பிக் ஆகியோர் ஷாட்களைத் தடுக்க போர்த்துகல் 3-0 என்று வெற்றி பெற்று யூரோ காலிறுதிக்கு முன்னேறியது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles