Tuesday, February 10, 2026
spot_img
Homeபிரதமர் மோடியை சந்தித்த இந்திய அணி வீரர்கள்...!

பிரதமர் மோடியை சந்தித்த இந்திய அணி வீரர்கள்…!

டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பையை வென்ற இந்திய அணி இன்று அதிகாலை நாடு திரும்பியது. பார்படோஸில் இருந்து சிறப்பு விமானம் மூலம் புறப்பட்ட இந்திய அணி வீரர்கள், இன்று அதிகாலை டெல்லி விமான நிலையம் வந்தனர்.

கோப்பையுடன் நாடு திரும்பிய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்க ரசிகர்கள் அதிகாலை முதலே டெல்லி விமான நிலையம் வரத் துவங்கினர். இதனிடையே விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணியினருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பை அளித்தனர்.

டெல்லி வந்த இந்திய அணி வீரர்கள் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். இதோடு பிரதமர் மோடியுடன் அவர்கள் காலை உணவில் கலந்து கொண்டனர்.

பிரதமர் மோடியை சந்தித்ததைத் தொடர்ந்து இந்திய அணி வீரர்கள் டி20 உலகக் கோப்பையுடன் திறந்தவெளி வாகனத்தில் இன்று மாலை மும்பையில் நகர் வலம் வரவுள்ளனர்.

RELATED ARTICLES

Most Popular