இறந்த தாய் மீண்டும் உயிர்ப்பித்து வர பூஜை செய்த மகன் : இறுதியில் நடந்த சோகம்..!

இறந்த தாய் மீண்டும் உயிர்ப்பித்து வருவார் என்று பூஜை செய்த மகன் இறுதியில் தாய் உயிர்தெழுந்து வராத காரணத்தினால் தற்கொலை செய்து கொண்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில், பெரம்பலூர் முத்து நகரில் குடியிருப்பின் மாடி வீட்டில் துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் பொலிஸாருக்கு தகவல் கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய பொலிஸார் குறித்த வீட்டின் கதவை உடைத்து பார்த்த போது வரவேற்பறையில் 80 வயதுடைய தாயின் அழுகிய சடலமும் மற்றொரு அறையில் 35 வயதுடைய மகனின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையிலும் இருந்துள்ளன.

தாயின் உடலுக்கு அருகில் எலுமிச்சைப் பழம், ஊதுபத்தி, சூடம் போன்ற பூஜைப் பொருட்களும் சமையலுக்குப் பயன்படுத்தும் மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் என்பன தூவப்பட்டிருப்பதைக் அவதானித்த பொலிஸார் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.

80 வயதான தாய் அதிகம் நோய்வாய்ப்பட்டு அவதிப்படுவதால் தன் இறப்பிற்குப் பிறகு எவ்வித வருத்தம் கொள்ளமல் வாழ வேண்டும் என்று எழுதி வைத்துவிட்டு எறும்பு பவுடரை தண்ணிரில் கலந்து குடித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

வேலை முடிந்து வீட்டு வந்து தன் தாயைப் பார்த்த மகன் அவர் மீது கொண்ட அதீத பாசத்தால் தாய் மீண்டும் உயிர்தெழுவார் என்று இறந்த தாயின் சடலத்தை அடக்கம் செய்யாமல், சில வாரங்கள் பூஜை செய்து வந்துள்ளார்.

பூஜைக்குப் பின் தாய் எழுந்து வராத விரக்தியில் தன் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளாதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles