இந்தியன் 2 படத்துக்கு சென்சார் போர்டு கெடுபிடியா..?

சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படம் வரும் 12 ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்தியன் படத்தில் லஞ்சத்தை எதிர்த்து போராடிய சேனாபதி இந்தியன் 2 படத்தின் மூலம் மீண்டும் திரைகளை மிரட்ட வருகிறார்.

3 மணி நேரம் 4 நொடிகள் நீளம் கொண்ட இந்தியன் 2 படத்துக்கு சென்சார் வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ளது. குறிப்பாக படத்தில் 5 முக்கிய மாற்றங்களை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. புகைப்பிடித்தல் தொடர்பான எச்சரிக்கை வாசகங்களை கருப்பு நிறத்தில் மிகவும் பெரியதாக வெள்ளை நிற பின்னணியில் வைக்க வேண்டும், காட்சியில் வரும் ஊழல் சந்தை என்ற லேபிளை அகற்ற வேண்டும்.

குறைந்த ஆடைகள் கொண்ட அல்லது ஆடையில்லாது நடிகர்கள் தோன்றும் காட்சியில் மாற்றம் செய்ய வேண்டும். ‘டர்ட்டி இந்தியன்’ [Dirty indian], ‘F**k’ உள்ளிட்ட வசனங்களை நீக்க வேண்டும். படத்தில் வரும் காப்புரிமை பெற்ற விஷயங்களுக்கு NOC – தடையின்மை சான்றிதழ் வாங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles