சிம்பு நடிப்பில் அறிவிக்கப்பட்டு நீண்ட காலமாகவே ‘எஸ்டிஆர் 48’ படம் துவங்கப்படாமல் இருக்கிறது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாவதாக அறிவிக்கப்பட்ட இப்படம் பல காரணங்களால் தொடர்ந்து தள்ளிப்போய் கொண்டே இருக்கிறது.
தேசிங்கி பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘எஸ்டிஆர் 48’ படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
சிம்பு நடிப்பில் உருவாகவுள்ள ‘எஸ்டிஆர் 48’ படத்திற்காக நீண்ட காலமாகவே காத்திருப்பில் இருக்கின்றனர் ரசிகர்கள். உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாவதாக அறிவிக்கப்பட்ட இப்படம் பல காரணங்களால் துவங்காமல் இருக்கிறது. இதனால் ரசிகர்கள் கடுமையான அப்செட்டில் இருக்கின்றனர். இந்நிலையில் ‘எஸ்டிஆர் 48’ படம் குறித்து அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
‘மாநாடு’ படத்தின் வாயிலாக தரமான கம்பேக் கொடுத்த சிம்பு நடிப்பில் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்கள் ரிலீஸ் ஆகின . இதனையடுத்து சிம்புவின் வேற எந்த படமும் ரிலீசாகவில்லை. இதனிடையில் தான் ‘எஸ்டிஆர் 48’ படம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. ஆனாலும் ஓராண்டுகள் கடந்தும், இன்னமும் இப்படம் துவங்கப்படவில்லை. இதனால் சிம்புவின் ரசிகர்கள் கடும் அப்செட்டில் இருந்தனர்.
இந்நிலையில் ‘எஸ்டிஆர் 48’ படம் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒரு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தை தயாரிப்பதில் இருந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விலகியுள்ளதாக கூறப்படுகிறது. பட்ஜெட் பிரச்சனை காரணமாகவும், தற்போது சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் பிசினஸ் மிகவும் குறைவாக இருப்பதாலும் ‘எஸ்டிஆர் 48’ படத்தை தயாரிக்கும் முடிவை ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் கடும் அப்செட் அடைந்துள்ளனர்.
இதனையடுத்து ‘எஸ்டிஆர் 48’ படத்தை தயாரிக்க கனெக்ட் மீடியா & பிகே பிரைம் நிறுவனத்திடம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்நிறுவனம் தனுஷின் ’இளையராஜா’ பயோபிக் படத்தை தயாரிக்க உள்ளது. ஆனாலும் ‘எஸ்டிஆர் 48’ படத்தை தயாரிப்பில் இருந்து ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் வெளியேறியுள்ளதாக எந்தவிதமான அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலக நாயகனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு நடிக்கவுள்ளதாக வெளியான அறிவிப்பு ரசிகர்கள் மட்டுமல்லாமல் கோலிவுட் திரையுலகினர் மத்தியிலும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பை கிளப்பியது. ‘ஓ மை கடவுளே’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘எஸ்டிஆர் 48’ படத்தினை தேசிங்கு பெரியசாமி இயக்கவிருக்கிறார். இப்படத்தில் சிம்பு ஹீரோ, வில்லனாக இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
