இலவச இணைய இணைப்பு குறுஞ் செய்தி மூலம் தரவுகள் திருட்டு..!

அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் இலவச இணைய இணைப்புகளை வழங்குவதாகக் தெரிவித்து தொலைபேசிகளுக்கு வரும் குறுஞ் செய்திகள் மூலம் தரவுகளை வேறு தரப்பினருக்கு அனுப்ப முடியுமென தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் இயக்குனர் மேனகா பத்திரன தெரிவித்தார்.

இவ்வாறான இணைப்புக்களை அணுகுவதன் மூலம் சமூக ஊடக கணக்குகள் மற்றும் மொபைல் போன் தரவுகளை மற்ற தரப்பினருக்கு அனுப்ப முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

குறுஞ்செய்திகள், வாட்ஸ்அப், மெசஞ்சர் மற்றும் தொலைபேசிக்கு ஒரு சாதாரண குறுஞ்செய்தி மூலம் இலவச டேட்டாவைப் பெற முடியுமென இந்நாட்களில் செய்தி அனுப்பப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், இவ்வாறான இணைப்புகளில் இணைந்து தமது தரவுகளை வேறு தரப்பினர் பெற்றுக் கொள்வதாக வழமையான முறைப்பாடுகள் காணப்படுவதாகத் தெரிவித்த பணிப்பாளர், அவ்வாறான இணைப்புகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles