ஒரே இரவில் தன் குடும்பத்தையே கொலை செய்த இராணுவ வீரர்..!

இந்தியா, ஹரியானா மாநிலம் நராய்கர் நகர் அருகே உள்ள ரத்தோர் கிராமத்தில் வசித்த வந்த முன்னாள் இராணுவ வீரரான பூஷன் குமார் தன் மொத்த குடும்பத்தையும் ஒரே இரவில் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தாய், சகோதரன், சகோதரனின் மனைவி மற்றும் சகோதரனின் 7 வயது மகன் , 6 வயது மகள் மற்றும் 6 மாத கைக்குழந்தை உட்பட 6 பேரை நேற்றுமுன்தினம் இரவு கொலை செய்து எரிக்க முயற்சி செய்துள்ளார்.

இதனைத் தடுக்க முயன்ற பூசன் குமாரின் தந்தையை தாக்கியுள்ளார். படுகாயமடைந்த தந்தை தட்டுதடுமாறி எழுந்து அக்கம்பக்கத்தினரை அழைத்து உதவி கேட்டுள்ளார்.

இதனையடுத்து தகவல் கிடைத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து பூசன் குமாரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட பூசன் குமாரை விசாரித்ததில் சகோததர்களுக்கிடையே இருந்த நிலத்தகராறு தான் இத்தனைக் கொலைகளுக்கும் காரணம் என்று தெரியவந்துள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles