ஆனந்த் அம்பானிக்கு திருமண பரிசாக ரூ. 40 கோடி வீடு கொடுத்த சூப்பர் ஸ்டார், ரோல்ஸ் ராய்ஸ் கார் கொடுத்த தீபிகா..!

ஆனந்த் அம்பானிக்கும், ராதிகா மெர்ச்சன்ட்டுக்கும் நடிகர்கள், நடிகைகள் என்ன பரிசு கொடுத்தார்கள் என்பது தெரிந்தால் உங்களுக்கு ஒரு நிமிஷம் தலையே சுத்திரும்.

தொழில் அதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணம் ஜூலை 12ம் தேதி மும்பையில் நடந்தது. அந்த திருமணத்தில் திரையுலகை சேர்ந்த பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள். இந்நிலையில் அவர்கள் மணமக்களுக்கு கொடுத்த பரிசுப் பொருட்களின் விபரம் வெளியாகியுள்ளது. கணக்கு பார்க்காமல் பரிசு கொடுத்திருக்கிறார்கள் திரையுலக பிரபலங்கள்.

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் என்றால் ஆனந்த் அம்பானிக்கு உயிர். இந்நிலையில் ஆனந்த் அம்பானிக்கு பிரான்ஸில் ஒரு அபார்ட்மென்ட் வாங்கிக் கொடுத்திருக்கிறார் ஷாருக்கான். அந்த அபார்ட்மென்ட்டின் விலை ரூ. 40 கோடி மட்டுமே. பாலிவுட் நடிகர் சல்மான் கானோ ரூ. 15 கோடி மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கை ஆனந்த் அம்பானிக்கு வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

முகேஷ் அம்பானி குடும்பத்தாருக்கு அமிதாப் பச்சன் குடும்பம் மிகவும் நெருக்கமானது. பச்சன்களோ ராதிகா மெர்ச்சன்ட்டுக்கு ரூ. 30 கோடி மதிப்புள்ள மரகத நெக்லஸை திருமண பரிசாக கொடுத்திருக்கிறார்கள். ரன்வீர் சிங்கும், அவரின் காதல் மனைவியான நடிகை தீபிகா படுகோனும் மணமக்களுக்கு ரூ. 20 கோடி மதிப்புள்ள கஸ்டமைஸ்ட் ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாக கொடுத்து அசத்தியிருக்கிறார்கள்.

ஆனந்த் அம்பானியின் அண்ணன் ஆகாஷுக்கு மிகவும் நெருக்கமானவர் பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூர். அவரும், மனைவி ஆலியா பட்டும் சேர்ந்து ஆனந்த் அம்பானி, ராதிகாவுக்கு ரூ. 9 கோடி மதிப்புள்ள பென்ஸ் காரை பரிசாக கொடுத்திருக்கிறார்கள். நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவும், மனைவி கியாரா அத்வானியும் சேர்ந்து ரூ. 25 லட்சம் மதிப்புள்ள ஷாலை பரிசாக கொடுத்திருக்கிறார்கள்.

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதால் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை. திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு தன் மனைவி ட்விங்கிள் கன்னாவுடன் வந்திருந்தார். அவர் ஆனந்த் அம்பானிக்கு ரூ. 60 லட்சம் மதிப்புள்ள பேனாவை கொடுத்திருக்கிறார். நடிகை கத்ரீனா கைஃபும், நடிகர் விக்கி கௌஷலும் சேர்ந்து ரூ. 19 லட்சம் மதிப்புள்ள தங்கச் சங்கிலியை ஆனந்த் அம்பானிக்கு கொடுத்திருக்கிறார்கள்.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles