யாழில் மர்மமான முறையில் ஒருவர் உயிரிழப்பு..!

இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர் பண்டத்தரிப்பு – செட்டிக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இறந்தவரின் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியதால், அயலவர்கள் அது குறித்து சோதித்த போது சடலம் வீட்டின் முன்புறத்தில் கிடப்பதை அவதானித்து பின்னர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles