ஜனாதிபதித் தேர்தலுக்கான பணம் : திறைசேரி வழங்க தயார்..!

தேர்தல் ஆணையாளரின் கோரிக்கைக்கு அமைவாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பணத்தை வழங்க திறைசேரி தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டதாகவும், பணப்புழக்கங்களுக்கு இடையில் முரண்பாடு ஏற்படாத வகையில் பணத்தை விடுவிக்கும் வகையில் பொருளாதாரம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அதன்படி, தேர்தல் ஆணையாளர் அலுவலகம் கிட்டத்தட்ட 8 பில்லியன் ரூபா மதிப்பீட்டை அனுப்பியுள்ளதுடன், அச்சிடுதல், பாதுகாப்பு, எரிபொருள், வாக்குப்பெட்டி தயாரிப்பு போன்ற எந்தவொரு அவசரத் தேவைக்கும் பணத்தை விடுவிக்க திறைசேரி தயாராக இருப்பதாகவும் ராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து, மதிப்பிடப்பட்ட செலவு அதிகரித்தால், நிச்சயமற்ற செயற்பாடுகளுக்கு தற்போது பணம் இருப்பதால், இதில் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது என்றும் அமைச்சர் கூறினார்.

 

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles