கேரளாவில் மண்சரிவு : 36 பேர் பலி..!

இந்தியா, கேரளாவில் மண்சரிவில் சிக்கி இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவந்த கன மழை காரணமாக இன்று அதிகாலை 2 மணியளவில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து அதிகாலை 4.30 மணியளவில் மீண்டும் மண்சரிவு ஏற்பட்டது. அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவில் 500 வீடுகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கிக்கொண்டதுடன் இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்ற நிலையில், பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles