ஜெயிலர் 2 குறித்து யோகி பாபு கொடுத்த புது அப்டேட்..!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் கடந்த வருடம் ஆகஸ்டு மாதம் வெளியாகி 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. இப்படத்தில் ரஜினிகாந்த் மாறுபட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். யோகி பாபுவின் நகைச்சுவை காட்சிகள் மக்களால் ரசிக்கப்பட்டது. இவருடன் இந்திய சினிமா பிரபலங்களான ஜாக்கி செராஃப், மோகன் லால், சிவராஜ் குமார் கவுரவ தோற்றத்தில் நடித்து இருந்தது படத்திற்கு கூடுதல் பலம்.

ஜெயிலர் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து ஜெயிலர் 2-ம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான திரைக்கதை தயார் செய்யும் பணிகளில் நெல்சன் ஈடுப்பட்டு வருகிறார்.

இன்னொரு புறம் ஜெயிலர் 2-ல் நடிக்கும் இதர நடிகர், நடிகை தேர்வும் நடக்கிறது. இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்து அவரோடு பேசி வருவதாக சில மாதங்களுக்கு முன் தகவல் வெளியாகியது. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் தயாராக இருக்கிறது.

தற்பொழுது ஜெயிலர்-2 படத்தின் மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. ஜெயிலர் 2 படத்தில் யோகி பாபு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் நடந்த நேர்காணலில் யோகி பாபு கூறியுள்ளார். இந்த பாகத்திலும் அவருடைய நகைச்சுவை காட்சிகள் ரசிக்க கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles