மூத்த மகன் என நினைத்து 2-வது மகனை கொன்ற பெற்றோர்..!

தெலுங்கானா மாநிலம் மஞ்சேரியல் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவருடைய மனைவி பத்மா. இவர்களுக்கு அசோக், சேகர் என இரு மகன்கள் உள்ளனர்.

விஜயகுமார், பத்மா இருவருக்கும் மது பழக்கம் இருந்தது. அப்போது போதையில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த மூத்த மகன் அசோக் அவர்களை தட்டிக் கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார், பத்மா இருவரும் மூத்த மகன் அசோக்கை கொலை செய்ய முடிவு செய்துள்ளனர். அப்போது, வீட்டில் 2-வது மகன் சேகர் போர்வையை மூடியபடி தூங்கிக் கொண்டிருந்தார். மூத்த மகன் என நினைத்து 2-வது மகன் சேகரை விஜயகுமார், பத்மா இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர்.

பத்மா அவரது கால்களை பிடித்து கொண்டார். ஜெயக்குமார் அரிவாளால் சேகரை வெட்டினார். அவர் கத்தி கூச்சலிட்டார். அப்போதுதான் அவர்களுக்கு வெட்டு பட்டது சேகர் என்பது தெரியவந்தது.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர். அவர்கள் சேகரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, விஜயகுமார் அவரது மனைவி பத்மா இருவரையும் கைது செய்து, ஜெயிலில் அடைத்தனர். இந்நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles