இலஞ்சம் பெற்ற நீதவான் கைது…!

பெண்ணொருவரிடம் மாத்தளை பகுதியிலுள்ள நீதவான் ஒருவர் ரூபா 10,000 இலஞ்சம் பெற்றுக் கொண்டபோது இலஞ்ச ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருகோணமலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தாபரிப்பு பணம் மற்றும் அவமானப்படுத்தல் குற்றங்களுக்காக ரூபா 80,000 நட்டஈடு கோரி வழக்கொன்றைப் பதிவுசெய்ய குறித்த நீதிபதியிடம் வழக்குத் தாக்கல் செய்வதற்குத் தேவையான ஆவணங்களை வழங்கியுள்ளார்.

வழக்கில் பெண் குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொடுப்பதற்காக ரூபா 50,000 இலஞ்சம் கேட்டுள்ளார். அதில் 10,000 ரூபாவை வரக்காமுர பிரதேசத்திலுள்ள குறித்த நீதவானின் வீட்டிலுள்ள அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளும் போதே அவர் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles