காதலியை சந்திக்கச் சென்ற இளைஞனை தாக்கி பணம், நகைகளை கொள்ளையிட்ட மர்ம கும்பல்..!

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள காதலியை சந்திக்கச் சென்ற இளைஞனை கும்பல் ஒன்று தாக்கி நகை, பணம், கைத்தொலைபேசி, முச்சக்கரவண்டி என்பவற்றை கொள்ளையடித்துச் சென்றதாக முறைப்பாடு கிடைத்துள்ளதாக மானிப்பாய்ப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இளைஞன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் சென்று அங்கிருந்து உரும்பிராய்க்கு முச்சக்கரவண்டியில் பயணித்துள்ளதுடன், வழியில் அவர் பயணித்த முச்சக்கரவண்டியை மற்றுமொரு முச்சக்கரவண்டி குறுக்கே சென்று குறித்த இளைஞனை வாளால் தாக்கி பணம், நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

வாள்வெட்டு தாக்குதலின் பின்னர் தாம் மயங்கி விழுந்ததாகவும், சுயநினைவு திரும்பிய போது, வாடகை அடிப்படையில் தான் எடுத்துச் சென்ற முச்சக்கரவண்டியும் காணாமல் போயுள்ளதாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், காயமடைந்த குறித்த இளைஞர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles