பந்துல குணவர்தனவின் கடன் அட்டை மோசடி தொடர்பில் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவு..!

அமைச்சர் பந்துல குணவர்தனவின் கடனட்டையை எடுத்து பொருட்களைக் கொள்வனவு செய்து மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கொழும்பு மேலதிக நீதவான் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அமைச்சரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் உண்மைகளை முன்வைத்ததையடுத்து, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

விசாரணையின் போது, கடனட்டை தொடர்பான பரிவர்த்தனைகள் குறித்து தகவல்களை வழங்கி, மேற்படி வங்கியின் மேலாளருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்திடம் கோரியிருந்தனர்.

இதன்படி, வங்கியிடமிருந்து தேவையான தகவல்களைப் பெறுவதற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles