முடியாது தம்பி… : விஜய் மகனுக்கு நோ சொன்ன சூரி..!

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கிறார் விஜய். இவருடைய மகன் ஜேசன் சஞ்சய், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்கப் போவதாக அறிவிப்புகள் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது.

தற்போது இந்த படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முடிந்து நடிகர் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் ஹீரோவாக நடிக்க கவின், விஜய் சேதுபதி உள்ளிட்ட சில நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ஜேசன் சஞ்சய், நடிகர் சூரியுடன் முழு நேர ஆக்ஷன் த்ரில்லர் கதையை அவரிடம் கூறியிருக்கிறார். ஆனால் சூரி, “இந்த மாதிரி கதையில் மாஸ் ஹீரோ நடித்தால் சரியாக இருக்கும். இது எனக்கு சரிப்பட்டு வராது” என்று சொல்லி அந்த படத்தில் நடிக்க மறுத்ததாக இணையத்தில் தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles