மிரள வைக்கும் கங்குவா படத்தின் டிரைலர்..! (Video)

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘கங்குவா’. 38 மொழிகளில் 3டி மற்றும் ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் பிரம்மாண்ட பான் இந்தியா படமாக இந்த படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் வெளியிட உள்ளது. வருகிற அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் போஸ்டர்கள் மற்றும் பாடல்கள் குறித்த அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியான வண்ணம் உள்ளது.

கடந்த மாதம் படத்தின் முதல் பாடலான ஃபயர் சாங் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் படத்தின் டிரைலர் இன்று [ஆகஸ்ட் 12 ஆம் தேதி] வெளியாகும் எனப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்த நிலையில் ரசிகர்கள் வழி மேல் விழி வைத்து காத்திருக்கத் தொடங்கினர்.

அதன்படி தற்போது கங்குவா படத்தின் அதிரடியான டிரைலர் வெளியாகியுள்ளது. மர்மங்கள் பல நிறைந்த தனித் தீவில் வாழும், யாருக்கும் புரியாத மர்மம் ஒன்றைப் பற்றியதாகத் தொடங்கும் டிரைலர், வில்லன் பாபி தியோலின் விருந்தாருந்த வாரீரோ என்ற வசனத்துடன் அடுத்த கட்டத்துக்கு நகர்கிறது.

தீவின் காடும், சுற்றியுள்ள கடலும் போர்க்களமாக மாறி சூர்யாவுக்கான களமாக திகழ்கிறது. உன் ரத்தமும், என் ரத்தமும் வெவ்வேறா, முன் நெற்றியும் முழங்காலும் மண் தொடா… மண்டியிடா என்று சூர்யா பேசும் வசனங்கள் காட்சிகளுடன் காணும்போது மிரட்டலாக அமைந்துள்ளது. மேலும் படத்தின் தூய தமிழை கையாண்டுள்ளது கவனம் ஈர்த்துள்ளது. மொத்தத்தில் அட்வென்ச்சர் ஆக்ஷன் போர்க்களமாக கங்குவா திரைகளை ஆளும் என்று தெரிகிறது.

Video Source : Saregama Tamil

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles