குளியல் தொட்டி நீரில் மூழ்கும் உருவமா ஸ்ரீதேவி..? : இன்றுவரை புலம்பும் ரசிகர்கள்..!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் 61வது பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவரின் திடீர் மரணம் பற்றி ரசிகர்கள் தீவிரமாக பேசி வருகிறார்கள். குளியல் தொட்டி நீரில் மூழ்கி இறந்துவிட்டார் என்பதை இன்னும் ஏற்க முடியவில்லை என்கிறார்கள் ரசிகர்கள்.

ஸ்ரீதேவியின் பிறந்தநாளான இன்று அவரின் மரணம் பற்றியே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் சென்று அங்கு முதல் லேடி சூப்பர் ஸ்டார் ஆனவர் ஸ்ரீதேவி. இந்தி தெரியாமல் பாலிவுட் சென்றவர் நம்பர் ஒன் நடிகை ஆனார். பாலிவுட் தயாரிப்பாளரான போனி கபூரை காதலித்து கடந்த 1996ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஜான்வி, குஷி என்கிற மகள்கள் இருக்கிறார்கள். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருந்தபோது துபாய் ஹோட்டலில் குளியல் தொட்டி நீரில் மூழ்கி உயிரிழந்தார் ஸ்ரீதேவி. அப்பொழுது அவருக்கு வயது 54.

இன்று ஸ்ரீதேவியின் பிறந்தநாள் ஆகும். அவர் உயிருடன் இருந்திருந்தால் இன்று அவருக்கு 61வது பிறந்தநாள். இந்த நாளில் பலரும் சமூக வலைதளங்களில் ஸ்ரீதேவி பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக குளியல் தொட்டி நீரில் மூழ்கும் அளவுக்கு சிறு ஆள் இல்லை ஸ்ரீதேவி. நல்ல உயரமான அவர் எப்படி குளியல் தொட்டி நீரில் மூழ்க முடியும். ஸ்ரீதேவி இறந்தது இன்னும் மர்மமாகவே இருக்கிறது. அவருக்கா இப்படியொரு முடிவு வர வேண்டும் என ரசிகர்கள் புலம்புகிறார்கள்.

நாத்தனார் மகன் மோஹித் மர்வாவின் திருமணத்தில் கலந்து கொள்ள கணவர் போனி கபூர், இளைய மகள் குஷியுடன் துபாய்க்கு சென்றார் ஸ்ரீதேவி. மூத்த மகள் ஜான்வி தன் முதல் படமான தடக் ஷூட்டிங்கில் இருந்ததால் துபாய் செல்லவில்லை. திருமணத்திற்காக சந்தோஷமாக துபாய்க்கு சென்ற ஸ்ரீதேவி பிணமாக நாடு திரும்பியதை யாரும் இன்னும் மறக்கவில்லை.

ஸ்ரீதேவியின் பிறந்தநாளான இன்று அவரின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் ஜான் என தெரிவித்துள்ளார் போனி கபூர். நள்ளிரவில் அவர் போஸ்ட் செய்த புகைப்படத்தை பலரும் லைக் செய்திருக்கிறார்கள். ஸ்ரீதேவியின் அரிய புகைப்படம் ஒன்றை வெளியிடுங்கள் போனிஜி என ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஸ்ரீதேவியின் பிறந்தநாளில் அவரின் மரணம் பற்றி மட்டும் அல்ல அவரின் படங்கள் பற்றியும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். ஸ்ரீதேவியின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் மாம். அந்த படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது அவருக்கு கிடைத்தது. அவருக்கு பதில் குடும்பத்தார் அந்த விருதை பெற்றுக் கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles