சூடான் இராணுவ மோதல் : 28 போ் உயிரிழப்பு..!

வட ஆபிரிக்க நாடான சூடானின் வடக்கு டாா்ஃபா் மாகாணத்தில் இராணுவத்துக்கும் துணை இராணுவத்துக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 28 போ் உயிரிழந்துள்ளனர்.

மாகாணத் தலைநகா் எல் ஃபாஷரில் ஆா்எஸ்எஃப் துணை இராணுவப் படை நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் 28 போ் உயிரிழந்துடன் 46 போ் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது

டான் இராணுவ தலைமைத் தளபதி அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹானுக்கும் எஸ்டிஎஃப் துணை இராணுவப் படை தளபதி முகமது ஹம்தான் டகேலோவுக்கும் இடையிலான அதிகாரப் போட்டி காரணமாக, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இரு படைகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றுவருகிறது. இதில் இதுவரை சுமாா் 15,000 போ் வரை உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles