சிவகார்த்திகேயனின் சர்ச்சை பேச்சு : பதிலடி கொடுத்த தனுஷ்..!

சமீபத்தில் சிவகார்த்திகேயன் பேசிய பேச்சு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் தனுஷை தான் குறிப்பிட்டு பேசினார் என்று தனுஷ் ரசிகர்கள் கூறி வரும் நிலையில் சோஷியல் மீடியாவில் ஒரு வீடியோவையும் ஷேர் செய்து வருகின்றனர்.

தனுஷ் தற்போது ராயன் கொடுத்த வெற்றியினால் புது உத்வேகத்துடன் காணப்படுகின்றார். தனுஷின் ஐம்பதாவது திரைப்படமான ராயன் படத்தை தனுஷே இயக்கியிருந்தார். ஏ.ஆர் ரஹ்மான் இசையில் எஸ்.ஜெ சூர்யா, சந்தீப் கிஷன், செல்வராகவன் என பலர் நடிப்பில் வெளியான ராயன் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகின்றது.

நூறு கோடியை தாண்டி இப்படம் வசூலித்து வருகின்றது. இதையடுத்து சேகர் கம்முலா இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் குபேரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார் தனுஷ். இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் என்ற திரைப்படத்தையும் தனுஷ் இயக்கி வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பும் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. ப்ரேமலு போல ஒரு ரோம்காம் படமாக இப்படம் உருவாகி வருகின்றதாம். குபேரா மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய திரைப்படங்களின் வேலையை முடித்துவிட்டு தனுஷ் இளையராஜாவின் பயோபிக் படப்பிடிப்பில் இணைய இருக்கின்றார்.

அருண் மாதீஸ்வரன் இயக்கத்தில் இளையராஜாவின் பயோபிக் உருவாகவுள்ளது. இதன் அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்பே வெளியான நிலையில் இந்தாண்டு இறுதியில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என தெரிகின்றது. தற்போது இளையராஜா பயோபிக் திரைப்படத்திற்கான செட் ஒர்க் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் ஒருபக்கம் ராயன் வெற்றியினால் மகிழ்ச்சியில் இருக்கும் தனுஷ் ரசிகர்கள் மறுபக்கம் சிவகார்த்திகேயன் பேசிய பேச்சால் உச்சகட்ட அப்சட்டில் இருக்கின்றனர். சமீபத்தில் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடித்திருக்கும் கொட்டுக்காலி என்ற திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், நான் யாரையும் கண்டுபிடித்து வாய்ப்பு வழங்கி வாழ்க்கை கொடுத்தேன் என்றெல்லாம் சொல்லமாட்டேன், என்னை அப்படி சொல்லி சொல்லியே பழக்கிட்டார்கள் என்றார்.

இவர் இவ்வாறு பேசியதை தொடர்ந்து பலரும், தனுஷை தான் சிவகார்த்திகேயன் மறைமுகமாக சொல்கின்றார் என்றனர். ஆரம்பகாலகட்டத்தில் சிவகார்த்திகேயனை தன்னுடன் 3 திரைப்படத்தில் நடிக்க வைத்தார் தனுஷ். அதன் பிறகு சிவகார்த்திகேயனை ஹீரோவாக வைத்து எதிர் நீச்சல் மற்றும் காக்கிசட்டை ஆகிய படங்களை தயாரித்தார். எதிர் நீச்சல் திரைப்படம் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி கொடுத்தது.

எனவே பலரும் சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு தனுஷ் தான் காரணம் என பேசி வந்தனர். இதனை தான் சிவகார்த்திகேயன் தற்போது சுட்டிக்காட்டி பேசியுள்ளார் என கூறி தனுஷ் ரசிகர்கள் அப்சட்டில் இருக்கின்றனர். இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் தனுஷின் பழைய பேட்டி ஒன்றை எடுத்து இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றனர் தனுஷ் ரசிகர்கள்.

அந்த பேட்டியில் தனுஷ, நான் யார் நன்றியையும் எதிர்பார்த்து அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கல, எனக்கு அவர்களின் நன்றியும் தேவையில்லை என கூறியிருந்தார். இந்த வீடியோவை தனுஷ் ரசிகர்கள் ஷேர் செய்து சிவகார்த்திகேயனுக்கு பதிலடி கொடுத்ததாக கூறி வருகின்றனர். ஆனால் சிவகார்த்திகேயன் யாரை குறிப்பிட்டு இவ்வாறு பேசினார் என தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles